அவன் அடி தொழு!

வேலோடு வினைதீர்க்க வீற்றிருப்பான் -எங்கள்
விரதங்கள் தமைக்கண்டு போற்றி நிற்பான்.
காலங்கள் தமைமாற்றிக் கட்டிவைப்பான் -காணும்
கனவெல்லாம் கண்முன்னே கிட்டவைப்பான். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அவன் அடி தொழு!

புத்தெழுச்சி யோடு போற்று!

உள்ளத்தினுள்ளே விசக்கடல் -உதட்
டோரமோ தேனென வார்த்தைகள்-பல
கள்ளத் தனங்கள் மனதிலே-பொய்யாய்க்
கடமை புரிவதாய்க் காட்டுதல் -என
கொள்ளை இலாபம் அடித்திட -தங்கள்
குள்ளத் தனங்களைச் செய்திட -நின்ற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புத்தெழுச்சி யோடு போற்று!

விழிப்பறவை வளர்ப்போர்.

இமைச்சிறகு இரண்டடித்துப்… பறக்கிறது விழிப்பறவை!
அது எங்கும் திரிகிறது!
அட…பகலில், மின்குமிழ்கள்
ஒளிரும் இரவுகளில்,
ஊறும் அழகுகளை
இரசித்தபடி செல்கிறது! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on விழிப்பறவை வளர்ப்போர்.

எழுக!

கண்களில் பிறந்தன கவிதைகள் கோடி.
கற்பனை சுரந்தது கனவினில் தேடி.
வண்ணமே வகைவகையாய் எழுந்தெங்கும்
மலர்ந்தன; மலர்களாய்…எழில் மிகத் தங்கும்.
பண்களும் பிறந்தன பரவின திக்கில்
பசி பிணி தொலைந்தது…இடர் விழும் செக்கில். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எழுக!

எனை எனக்கு உணர்த்து

கனவில் வந்து கவிதை தந்து
கலைந்து போகிறாய் – எந்தன்
கவலை தீர்க்கும் மருந்து தந்து
கடந்து ஓடுவாய்.
நனவில் நின்று நிழல் உவந்து
நனைப்பதெந்த நாள்?- மனம் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எனை எனக்கு உணர்த்து

வேலின் நுனியால் விதி மாற்றுபவன்.

இருபத் தைந்து எழில்கொள் நாட்கள்
எமக்கு நல்கும் பெருவரங்கள்.
எட்டுத் திக்கும் இருந்து வந்துன்
இடத்தில் செய்வோம் நிதம் தவங்கள்.
பெரியோர் சிறியோர் எனும் பேதங்கள்
பெருவேலின் முன் விழும்;மனங்கள்… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேலின் நுனியால் விதி மாற்றுபவன்.

நிழல் உறவு

நிழலினது தந்தை… வெளிச்சம்.
அதன் தாயோ
ஒளி ஊடு புகவிடாத ஒருபொருள்.
இவை புணர
நிழல் பிறக்கும்!
தந்தை சொல் கேட்டு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நிழல் உறவு

புதிர்கள் அவிழ் நீ!

வாழும் வழிகாட் டிடுவாய் முருகா!
மாய வினைகள் தனில் தீ யிடுவாய்.
ஆளும் மனமும், அறம் சேர் கவியும்,
ஆரா அமுதே அருள்வாய். தருவாய்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புதிர்கள் அவிழ் நீ!

கனவுகளின் புகழ்

கனவுகள் என்மேல் கவியத் தொடங்கின; ஆம்
மனமும் உடலும் மயங்கி
உறக்கத்தின்
பிடிக்குள் கிறங்க
எங்கெங்கிருந்து வந்தோ
படிந்தன கனாக்கள்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கனவுகளின் புகழ்

பாதைகள்

பாதைகள் முடிந்ததில்லை.
யார் யாரோ பயணித்துத்
தேவையென அன்றொருநாள் செய்தும், திருத்திவைத்தும்,
போட்டுவைத்த பாதைகள்
புயல் மழைக்குள் புதைவதில்லை.
வாட்டிய வெயில் அனலுள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பாதைகள்

நீதி, நியதி.

பொய்கள் முதலில்
பொங்கிப் பிரவகித்து
மெய்களை விழுங்கி விடுமெனிலும்,
பரபரப்புப்
பொய்கள் ஜெயிப்பது போல இருந்திடினும்,
பொய்களைப் பலரும் போற்றிடினும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நீதி, நியதி.

பேதப் பாடல்

காற்றினது பாடல்கள் கலந்தன ககனமெங்கும்.
காற்றினது கீதங்கள்
கரைந்தன திசைகளெங்கும்.
கடலினது பாடல்கள் கடக்குந்
தொடுவானெங்கும்.
மேகத்தின் பாடல்கள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பேதப் பாடல்

கடன்

இந்த மண்ணது எங்கள் மண்ணென
இன்று சொல்லிடக் கூடுமோ?
எம் சிறப்புகள் எம் தனித்துவம்
இங்கு இற்று நீர்த்தோயுமோ?
அன்னை மண் முகம் மாறுமோ? அயல் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கடன்

உண்மை

உண்மைகளை எல்லோரும் உணர்வார்…சாகா
உண்மைகளை யாவரும்தான் மதித்து நிற்பார்.
உண்மைகளை எவரும் மறு தலிக்கார்…என்றும்
உண்மைகள்தாம் வெல்லும் என்றுரைப்பார். ஏற்பார்.
உண்மையதன் பெருமையை எல்லோரும் காண்பார்.
உண்மைகளின் கசப்பினையும் ஊரார் தேர்வார். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உண்மை

நம்பு

சொந்தம் யாவுமே வந்த போதிலும்
துன்பம் நூறும் தொலையுமோ?
சூழும் தீயிடர்… சொல்லும் வார்த்தையில்
சோர்ந்து சாய்ந்து கருகுமோ?
நொந்த மேனி, மனத்தின் காயம், நோய்,
நூல்கள் கட்ட மறையுமோ? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நம்பு