நேருவோம்

வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை
வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை
தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம்
சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல்
கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து
கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர் Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on நேருவோம்

சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த
மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன்
ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து
அற்புதம் செய்பவரோ சில பேர்களே!
ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு
ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும்,
தினந்தினமும்
பாலாறு பாயாத போதும்,
எம் நிலம் சிரிக்கும்.
சாவைத் துரத்திச் சரித்து
நம் திசையெங்கும் Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

யாழ்ப்பாண இடம்பெயர்வு

கவிஞர் ஜெயசீலனின் பிரியாவிடைக் காவியம் நெடுங்கவிதை ஆற்றுகை. அளிக்கை செய்வோர் பரதன் , பார்த்தீபன் ,வேந்தன் , தேவானந்த் 1995 ஒக்ரோபர் யாழ்ப்பா இடம்பெயர்வைப் பேசும் கவிதை நன்றி -நிகழ்Tv
Posted in Video | Comments Off on யாழ்ப்பாண இடம்பெயர்வு

வருவார்கள்…அவனும் வருவான்!

“எனக்குத்தான் எல்லாமும் தெரியும்
பிறர்பற்றி
எனக்கென்ன?
அவர்க்கு என்ன தெரியும்” என்ற
அலட்சியமும்,
அபரிமித ஆற்றல் பலம் திறனும், Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on வருவார்கள்…அவனும் வருவான்!

கம்பனாம் காலக் கவி

அழகான பாக்கள் அதிலே கனாக்கள்
அடி ஆழமுள்ள உனதாற்றில்…
விளையாட எண்ணி விழிகள் பிதுங்கி
மிதவா தமிழ்ந்தேன் நினதேட்டில்.
களமாடல், காதல், கடல் தாண்டி மோதல்,
கருவாய் மிளிர்ந்த கவிமேட்டில் Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on கம்பனாம் காலக் கவி

தீப வலி

ஓர் அசுரன்…
இந்த உலகை வதைத்தவன்…தன்
கோரச் செயலுணர்ந்து,
கொடுமைக்குத் தண்டனையாய்
ஊர்தனது சாவை
உளம்மகிழ்ந்து கொண்டாட Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on தீப வலி

இருண்மையும் ஒளியும்.

இரவின் அடர்ந்த இருட்டுக்குள்த் தானே
உருவாச்சு கிழக்கில் ஒளியின்
முதற்துளியும்?
அந்த ஒளி ‘நுகத்தை’ ஆக்கியே விட்ட ‘சூல்’
‘விந்து’ எவையெவைகள்
புணரப் பிறந்ததென்ற Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on இருண்மையும் ஒளியும்.

சகலகலா சக்தி!

‘சகல கலாவல்லி’, சக்தி, அவளின்
புகழினைப் போற்றும் பொழுதில் – அகங்கள்
குளிரும்; உடலில் குதூகலம் பொங்கும்;
விழிகசியும்; பக்தி மிகும். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on சகலகலா சக்தி!

முத்தேவியர் புகழ் பாடு.

சிங்கத்தில் வந்தே திசைகாக்கும் ‘துர்க்கை’யவள்
பொங்குகிற வீரத்தைப் போர்த்திறணை -எங்களுக்குத்
தந்தருள்வாள்; சூழும் தடையுடைத்தும் வெல்லவைப்பாள்;
வந்தனைகள் செய்;வா மகிழ்ந்து. Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on முத்தேவியர் புகழ் பாடு.

இரவும் ஒரு இறையே!

பெளர்ணமிக்கு ஓரிரு நாட்கள் இருக்கிறது.
கெளவிற்று இரவுப் பறவை
பகற்பழத்தை.
முக்கால் வாசி முட்டை மஞ்சட் கருவாக
நிற்கிறது பொன்நிலவு
எனது தலைக்குமேல். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on இரவும் ஒரு இறையே!

கேட்போம் கொடுப்பர்!

அன்னை எனும்சக்தி மூன்று
வடிவெடுக்க அன்னவரை
நின்றும் கிடந்தும் நினைந்து வணங்கி நெகிழ்ந்துருகி
“என்ன கலை செல்வம் வீரம் இருக்கிறதோ எல்லாமும்
குன்றாமற் தாரு”மென்று கேட்போம்; கொடுப்பராம்… கொள்வோமே! Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on கேட்போம் கொடுப்பர்!

வேண்டித் துதி செய்

Posted in Video | Comments Off on வேண்டித் துதி செய்

வேண்டித் துதிசெய்.

கலையாத கல்வியும், கரையாத செல்வமும்,
கனல்கின்ற வீரமதுவும்,
கருகாது வாழ்வினைக் களித்தோங்க வைப்பவை;
கவின் சூழ வரந் தாறவை;
உலகத்தில் உன்பேரை உயர்தாள வைப்பவை;
உடன் தேட… ‘சக்தி’ களினை Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on வேண்டித் துதிசெய்.

“தங்களாலேனும் கிடைக்குமா” என்று

உன் துவக்கின் தோட்டாவோ,
உன் கரத்தின் தடி பொல்லோ,
அன்றவனைச் சாய்க்க…
அள்ளி எடுத்துவந்து;
மாரி பொழிந்துமே வாரடித் தோடியதால்
ஈரஞ் சுவறி இருந்த Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on “தங்களாலேனும் கிடைக்குமா” என்று