Author Archives: Webadmin

செய் பிழை

காலம் கடத்தி ஆற்றவேண்டிய கடமை காலம் கடத்தியே ஆற்றப் படல் வேண்டும்! காலம் கடத்தாது ஆற்றவேண்டிய கடமை காலம் கடத்தாதே ஆற்றப் படல் வேண்டும்!

Posted in கவிதைகள் | Leave a comment

கனவாக ஏன் கலைந்தாய்?

தீயணைக்கச் சென்றவனே…. சா அணைக்க ஏன் சரிந்தாய்? தீ அணைந்திருக்கும் அங்கு; தீப்பிடித்து.. எம் நெஞ்சு! நீ அணைத்த தீயாலே நிஜம் தப்பிப் பிழைத்ததன்று!

Posted in கவிதைகள் | Leave a comment

வேசம்

அகத்திலே… எனைவீழ்த்த அம்புகளைக் கூர்தீட்டி, அகத்திலே… எனைச் சாய்க்க அரிய வியூகம் ஆக்கி, அகத்திலே… எனைப்புதைக்க ஆசைக் கிடங்குவெட்டி,

Posted in கவிதைகள் | Leave a comment

கவி அறிக!

கவிதை என்பது கசிந்து உருகியும், கவிதை என்பது கட்டி இறுக்கியும், கவிதை என்பது கொஞ்சிக் குலாவியும், கவிதை என்பது கெஞ்சி அளாவியும், கவிதை கண்ணீர் சிந்த இழக்கியும், கவிதை கிச்சுக் கிச்சுக்கள் மூட்டியும்,

Posted in கவிதைகள் | Leave a comment

சுயமழிப்பு

பகலைப் பகலாய் இருக்க விடாது …கரு முகில்கள்; பகலின் முகத்தை அவைமறைக்கும்! இரவை இரவாய் இருக்க விடாது…ராவில் எரியும் விளக்குகள்; இரவியல்பெழில் சிதைக்கும்!

Posted in கவிதைகள் | Leave a comment

தாகம்

சாவுக்கும் வாழ்வுக்கும் சாட்சியாய் நின்ற நம் வீதியோரப் பனைகளை விசிறியாக்கிப் போம்…காற்று தேன் நக்கித் தாகம் ஆற்றும் திக்கிலுள்ள பூக்களிலே!

Posted in கவிதைகள் | Leave a comment

தாய்மை

எத்தனை இடர்களை எவரெவர் புரிந்தாலும், எத்தனை துன்பத்தை இற்றைவரை மனுக்குலத்தோர் செய்து அழித்தாலும், சிதைத்து முடித்தாலும், வையத் துயிர் உடலை வாட்டி வறுத்தாலும்,

Posted in கவிதைகள் | Leave a comment

பிடி

நெகிழ்ந்த கயிறுகள் நின்று மீண்டும் இறுகி அகத்தைப் புறத்தை அழுத்தத் தொடங்கியதால்… அசைக்க முடியாமல் அலறி ஓயும் கை கால்கள்.

Posted in கவிதைகள் | Comments Off on பிடி

ஊர் இதம்

வண்ணமயில் தோகை விரித்தாடுகிற போது வாய்திறந்து சந்த கவி பாடுகிற போது என் மனது விண் படியில் ஏறுகிற போது இன்பமெழும்… ஆம் இதற்கு ஈடு இணை ஏது?

Posted in கவிதைகள் | Comments Off on ஊர் இதம்

சிரஞ்சீவி

சாமி உறங்கியதாய்… சாமி மயங்கியதாய்… சாமி உயிர்விட்டுச் சமாதியாய்ப் போனதுவாய்… ஏதும் குறிப்பில்லை எங்கும்! அது நிஷ்டை

Posted in கவிதைகள் | Leave a comment

மீண்டென்றெம் வாழ்வு வாய்க்கும்?

காலங்கள் மாறிடும் கோலங்கள் மாறிடும் கனவுகள் மாறி உதிரும் கண்களின் காட்சியும் கவிதையின் கோணமும் கருத்ததும் மாறி அதிரும் ஞாலத்தின் வாழ்வியல் மாறிடும் …நீதியும் ஞாயமும் மாறி மறுகும்

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லதே நடக்கட்டும்!

பொய்யாய்ப் பழங்கதையாய் போனதெல்லாம் போகட்டும்! மெய்யை வருத்தி, மேனியெல்லாம் புண் பெருக்கி, உள்ளத்தில் ஆறா ஒருகோடி காயங்கள் அள்ளி அடுக்கி,

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பது எப்போ?

கண்ணுக்குத் தெரியாக் கறுமக் கிருமிகளை மண்ணுக் கனுப்பி தனது அதிருப்தியையும் வெறுப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தி இந்நாளில் திரும்பிடுது தன் இயல்புத்

Posted in கவிதைகள் | Leave a comment

மூச்சைத் தேடி

நாதி யற்றவர் ஆனோர் …நிலத்தினில் நாளை என்பதை யாரின் துணையொடெவ் வீதி யாலே கடந்திடுவோம் …?அமர் விபத்தில் சிக்கி முடவர் குருடராய் வேதனை சுமந்தா நிதம் யாசகம் வேண்டி வாழுவோம்? நாமித் திசையதன்

Posted in கவிதைகள் | Leave a comment

உழவு?

உழப்பட்டுத் துடிக்கிறது உயிர்ப்பாய்க் கிடந்த வயல்! உழவு வயலுக்கு ஒன்றும் புதிதல்ல… உழவன், உரிமையாளன், உழும் ஏர், விதை நெல், கலப்பை, சிறுபோகம், காலமழை, பெரும்போகம், விளைவு,

Posted in கவிதைகள் | Leave a comment