Category Archives: கவிதைகள்

ஏன்

பொய்கள் உரைப்போரே அஞ்சாமற் போகையிலே மெய்யை உரைக்க ஏன் மெய், அஞ்சித் துஞ்சவேண்டும்? பொய்யன் திமிரோடு புவியிற் திரிகையிலே மெய்யன் ஏன் அஞ்சி அடங்கி ஒடுங்கவேண்டும்?

Posted in கவிதைகள் | Leave a comment

எது மிஞ்சும்

ஆயிரம் ஓவியம் ஆண்டவன் தீட்டிட அற்புதத்தால் சுழல் பூமி ஆயினும் சாவதும் அண்டிடும் நோய்களும் ஆழுதேன் துன்பமும் சாமி? காய்களும் வெம்பல் கனிகளும் காலத்தின் கைகளுள் சிக்குதே காண் நீ

Posted in கவிதைகள் | Leave a comment

காத்துக் கிடக்கின்றேன்

கனவென்ற அன்னை நனவென்ற தந்தை கலந்தாட வந்த சிறுவாழ்வு கதையாகு மாமோ கவியாகு மாமோ கதி என்ன நாளை? பதில்கூறு! மனமென்ற மாயம் மடைதாண்டி ஓடும் வழி தேடிப் போகத் தெரியாது

Posted in கவிதைகள் | Leave a comment

தேடி வரம்கேட்போம் !

ஆயிரமாய் நல்ல அருங்கலைகள் பூமியெங்கும் ஓயா துயிர்க்க உடல்தந்து –தாயான தேவி கலைமகளே… தேர்ந்து திறண் தந்து சாவி கொடுத்தியக்கு சார்ந்து!

Posted in கவிதைகள் | Leave a comment

தூண்டி

என் தனித்த வரண்ட வானின் எல்லை தொடும் ஓர்பறவை… என் மன வானத்தில் எண்ணற்ற கவிப்பறவை தன்னை உயிர்க்கவைத்து தடை தாண்டிப் பறக்க விட்டு

Posted in கவிதைகள் | Leave a comment

கொரோனாக் காலம்

கொலையாலே உலகாளும் கொரோனா காலம். கூடி ‘பத்து இலட்சம்’ தாண்டி மரணம் நீளும். பல ‘வல்ல அரசுகளே’ பதறிச் சோரும். பாரதத்தில் பாதிப்பின் எல்லை மீறும். உலகின் தலை மகன் ‘Trump’ ம் மனையும் நேற்று உற்றனராம் நோய்த்தாக்கம்…கூர்ந்து பார்த்தால்

Posted in கவிதைகள் | Leave a comment

எழுக!

கண்களில் நீர் நதி வற்றிடா தோடிடும் காலம் தொடருது எதனால்? கடைக்கண்ணும் காட்டாக் கடவுளர்…கோவில்- களில் உறங்கும் நிலை எதனால்? புண்களும் ஆறாப் பொழுது தொடருதே புழுத்திடும் நாளை பார் அதனால்

Posted in கவிதைகள் | Leave a comment

வாழும் குரல்…..

இனிய குரல்வளத்தின் அதிஉச்ச எல்லையிது! கனக்கக் குரல் உளது கந்தர்வக் குரல் உனது! உணர்ச்சிகள் சகலதிற்கும் ஏற்ப உருமாறி கணக்கற்ற பாவங்கள் காட்டும் குரல் நினது!

Posted in கவிதைகள் | Leave a comment

தலைமுறையின் தேவ கீதம்

காற்றிருக்கும் நாள் வரை நின் கானமிருக்கும் -உந்தன் கந்தர்வக் குரலில் என்றும் ஈரமிருக்கும் ஊற்றடைத்துப் போச்செனினும் ஓசை உயிர்க்கும் -உடல் உக்கும் மண்ணுள்… உன் இசையோ பூத்துச் சிரிக்கும் !

Posted in கவிதைகள் | Leave a comment

அன்றும் இன்றும்

எல்லாமும் வழமைபோல் இயங்கிக்கொண் டிருந்ததன்று! எல்லோரும் தம்வீடு வாசல், கிடைத்தவேலை, என்றிருந்தார்; வாகனங்கள் மண்ணெண்ணை உண்டு …கரும் வண்ணப் புகை பறிய வந்து போச்சாம்.

Posted in கவிதைகள் | Leave a comment

உய்யும் வழியை உரை

பாவிகள் நோய்க் காவிகளாய் மாறி னார்…அப் பாவிகளும் காவிகளாய் மாறு கின்றார்! பாவமெது செய்தார்? மெய் தழுவித் தொட்டு பயங்கரத்தைப் பவ்வியமாய் வாங்கிக் கொண்டார்! ஏவ எவர் மீதினிலும் இறங்கும் பேயாய் எண்திக்கும் பரவுகிற கிருமி தொற்றி…

Posted in கவிதைகள் | Leave a comment

அறியாதார் அறியாதாரே

மனிதர்களில் அநேகமானோர் மிருகம் போலாய் வாழ்வதுதான் வழமை! மண்ணில் பிறந்து வந்து மனிதர்கள் மனிதர்களாய் வாழ்ந்தால் நன்மை! மனிதர்களில் சிலர் தலைவர் ஆவார் உண்மை! மனிதர்களில் தலைவரானோர் மக்கள் உய்ய வழி, வகையைக் காட்டல்..மேன்மை! இதனை விட்டு

Posted in கவிதைகள் | Leave a comment

அஞ்சுதல் அஞ்சாமை பேதமை!

ஏனின்னும் நாங்கள் எதிலும் அலட்சியமாய், ஏனின்னும் நாங்கள் எதிலும் அசட்டையாய், ஏனின்னும் நாங்கள் எதையும் புரியாது, ஏனின்னும் நாங்கள் எதற்கும் பயப்படாது, அஞ்சுதல் அஞ்சாமை பேதமை

Posted in கவிதைகள் | Leave a comment

அநாதை உலகு

அநாதையாச்சு வானம். அநாதையாச்சு முகில்கள். அநாதையாச்சு காற்று. அநாதையாச்சு வெய்யில். அநாதையாச்சு கதிரும். அநாதையாச்சு நிலவும். அநாதையாச்சு கடலும். அநாதையாச்சு கரையும். தனிமைப் படுத்தல் …சுய

Posted in கவிதைகள் | Leave a comment

என்னாகும் நாளை?

என்னாகும் நாளை… இன் றெவர்தான் தேர்ந்தோம்? எது எதுதான் நடக்குமென எவர்தான் காண்போம் ? இன்று சூழும் அவலமுகில் கலைந்தா ஓடும்? இல்லை பெரும் அழிவு மாரி அடித்தா ஓயும்? இன்றைக்கிவ் எச்சரிக்கை எமையா காக்கும்? இல்லை பேர் இடராகி எமையா மாய்க்கும்?

Posted in கவிதைகள் | Leave a comment