ருசி

பச்சை மலையின் ருசியைப் பகர்கிறது
பொச்சடித்து நானும்
சுவைத்த சுடுதேனீர்!
கடலின் ருசிதன்னைக் காட்டி மணக்கிறது
சுடச்சுடச் சொதிபொரிய லுடனிணைந்த
மீன்குழம்பு!
நிலத்தின் ருசியை உரைக்கிறது
நிலத்திருந்து
விளைந்ததில் சமைத்த விசேட கறிசோறு!
நெருப்பின் ருசியைவாயில்
நீரூறச் சொல்கிறது
இறைச்சி வறுவல்!
இப்படியாய்…. ஒன்றினது
ருசியை உணர்வதற்கு இன்னொன்று வேணுமிங்கு!
அறியேனென் ருசியை
உணரஉள்ள தேதென்று!
ஒருவேளை என்ருசியை என்கவிதை சொல்லிடுமா?
அதைவிடவும் வேறொன்று தான்
சொல்ல வரவுளதோ?
எவருரைப்பார்?
எனதுருசி புரியவில்லை எனக்கின்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply