உறவு

உன்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட
என்விரலும்
என்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட
உன்விரலும்
உன்னுடைய கண்ணீரை
நிறுத்துதற்கு என்மனமும்
என்னுடைய கண்ணீரை
நிறுத்துதற்கு உன்மனமும்
உனக்காகக் கண்ணீரை உகுத்துவிட
என்கண்ணும்
எனக்காகக் கண்ணீரை இறைத்துவிட
உன் கண்ணும்
உதவுகிற நாளினிற்தான்
உறவு உறவாகும்!
உதவாவரை உளமோ
ஊரறியாப் பகைவளர்க்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply