வடம்தொடு!

வேரிலேவெந்நீர்வீழ்ந்து
விருட்சமேபாறும்முன்…’பன்
ஈர்கரம்’ நன்னீர்ஊற்றும்!
இந்திரலோகம்போல்எம்
ஊர்தெருமாறும்! பக்தி
ஊற்றுகள்பெருகும்! நல்லைத்
தேர்வரதிசையின்மாசு
சிதறிடும்; புனிதம்சூழும்!

ஐம்பதுவருடத்தின்மேல்
அச்சாணிபற்றிச்சுற்றி
தெம்புசற்றிழகும்நான்கு
சிற்களைப்புதிதாய்மாற்றி…
செம்மைசேர்வெள்ளோட்டத்தை
சிறப்புறநடாத்தி… இன்று
‘நம்ஆறுமுகத்தார்’ தேரில்
நமைவாழ்த்தவந்தார்தேடி!

தலையெலாம்அலைகளாக
சமுத்திரக்கூட்டத்தின்மேல்
வலைவீசிக்களைவார்சோகம்!
வரம், அருள்பொழிவார்நாளும்!
அழித்தலாம்தொழிலைச்செய்து,
அயற்துயர்துடைத்து, பச்சை
எழில்சாத்திஆடிநல்லை
இறைவர….தொழுவோம்பாடி!

நல்லூர்த்தேர்நாளில்திக்கு
நாலும்‘மீள்உயிர்த்துக்’ கொள்ளும்!
அல்லல்கள்ஓட்டும்தேரால்
ஆன்மிகஅதிர்வெழுந்து
எல்லைகள்தாண்டிஆளும்!
எமக்குள்ளும்ஞானம்ஊறும்!
வல்லமைமனதில்ஏறும்!
வடம்தொடு…வாழ்வேமாறும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.