தேரன்றேதீர்த்தம்

தேரன்றேதீர்த்தமும்ஆடி…
‘அழித்தலெனும்’
ஆக்ரோஷவெம்மைஅடக்கி…
‘அருளலென’
மாரிமழைதூவி…
மண்ணும்மனங்களதும்
ஊறிக்குளிரவைத்த
ஒருபுதியவரலாற்றை
இன்றுகண்டோம்நல்லூரில்!
“இதுமுன்புநாம்காணா
ஒன்று” என்றுணர்ந்தோம்!
ஊரைவறுத்தவெயில்
சூழஇரதமேறிச்சுற்றி,
வேகமாய்ஓடி,
ஆறி, ‘இருப்பில்’ பச்சைசாத்தி,
ஊஞ்சலாடி,
கோவில்திரும்பி,
குலுங்கிக்குலுங்கிஆடி,
பக்தர்இடர்துயரைவேல்வீசிப்பந்தாடி,
உக்கிரமடக்கி,
உளக்கோபம்ஆவேசம்
தீர…பிரயாயச்சித்தஅபிஷேகம்
காணத்தொடங்க
கடல்கவிழ்ந்தமாதிரி…நல்
ஊரைமுழுக்காட்டி
அபிஷேகம்செய்வித்தார்
வருணனும்வானத்தமரரும்;
நிலங்குளிர்ந்து,
தெருவயல்குளிர்ந்து,
திக்குத் திசைகுளிர்ந்து,
மரங்கள்குளிர்த்து,
மாடுகண்டுவிலங்கினங்கள்
அனைத்தும்குளிர்ந்து,அயல்குளிர்ந்து,
எம்உடம்பும்
மனமும்உயிரும்மகிழ்ந்து
குளிர்ந்து, இன்று
எம்பாவம்பழிவினைகள்எல்லாமும்பொடிசெய்து,
எம்மைப்பன்னிரெண்டுஅனல்விழியால்
புடம்போட்டு,
அப்படியேமுழுகவைத்து,
அனலெரிக்காப்பாவங்கள்
அப்படியேகழுவிவிட்டு,
அணைத்தெம்மைஎம்மண்ணை
தூய்மைப்படுத்திவிட்டான்
‘துரை’ எங்கள்நல்லூரான்!
தாயருள்போல்ஆசிதந்நான்
விசேடமாகஇம்முறைதான்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.