காலக் கணிப்பு

எதையெதையும் யாரும் எழுதிவிட்டுப் போகட்டும்.
எதையெதையும் யாரும் இயற்றிவிட்டுப் போகட்டும்.
எதையெதையும் யாரும் இசைத்துவிட்டுப் போகட்டும்.
எதையெதையும் யாரும் இயம்பிவிட்டுப் போகட்டும்.
எதையெதையும் யாரும் படைத்துவிட்டுப் போகட்டும்.
எதையெதையும் யாரும் வரைந்துவிட்டுப் போகட்டும்.
எதையெதையும் யாரும் இரசித்துவிட்டுப் போகட்டும்.
எதையெதையும் யாரும் விமர்சித்துக் கிழிக்கட்டும்.

இன்றுவரை எத்தனைபேர் எத்தனையை எழுதினார்கள்?
இன்றுவரை எத்தனைபேர் எத்தனையை இயற்றினார்கள்?
இன்றுவரை எத்தனைபேர் எத்தனையை இசைத்தார்கள்?
இன்றுவரை எத்தனைபேர் எத்தனையை
இயம்பினார்கள்?
இன்றுவரை எத்தனைபேர் எத்தனையைப் படைத்தார்கள்?
இன்றுவரை எத்தனைபேர் எத்தனையை வரைந்தார்கள்?
இன்றுவரை எத்தனைபேர் எத்தனையை இரசித்தார்கள்?
இன்றுவரை எத்தனைபேர் எத்தனைவிமர்சித்தார்கள்?

யாரெதையும் எழுதினாலும்
யாரெதையும் இயற்றினாலும்
யாரெதையும் இசைத்தாலும்
யாரெதையும் இயம்பினாலும்
யாரெதையும் படைத்தாலும்
யாரெதையும் வரைந்தாலும்
யாரெதையும் இரசித்தாலும்
யாரெதை விமர்சித்தாலும்
காலம் எதைஎதனைக் கணக்கில் எடுக்கிறதோ
காலம் எதையெதனைக் காக்க நினைக்கிறதோ
காலம் எதையெதனை வாழவைக்க முயல்கிறதோ
காலம் எதையெதனைச் சாசுவதம் ஆக்கிடுதோ
காலத் தராசு எதைச் சரியாய்க் கணிக்கிறதோ
அவைமட்டும்…
சாகா வரம்பெற்று வாழ்ந்துயரும்!
அவைமட்டும்…
‘மார்க்கண் டேயன்’ போல்
இளமை மாறாச்
சிரஞ்சீவி யாகவே சீவிக்கும்!
ஏனையவை
அரைகுறையாய்;
வரலாற்றில் குப்பைகளாய்;
போய் மறையும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.