வாழவழியுண்டு

அழியாத ஆசை அலைமீறும் வேளை
அதிர்வூற நெஞ்சக் கடல் ஆடும்.
அஹிம்சை துறந்து அலைபோல் கிளர்ந்து
அடங்காத போரில் உடல்சீறும்.
வழியற்று… ஆசை தனைத்தீர்க்கத் தோற்று
மனமோ விரக்தி தனில் சோரும்.
மரணத்தின் கையைப் பிடித்தேனும் வெல்ல
மனிதம் துணிந்து விழும்…. மாழும்!

இது தானே இன்று நிதந்தோறும் எங்கள்
நிலம்தன்னில் நீளும் வரலாறு.
“இறந்தார்கள்– தூங்கி” என நாளும் சேதி
இது மாறவில்லை…. வழி கூறு.
எதுந்தாங்க வல்ல உடையாத உள்ளம்
இலை சந்ததிக்கு…நிதமிங்கு.
எதிர்பார்ப்புப் பொய்க்க தடையை ஜெயிக்க
இதயம் மறுக்கும்…பிணம்பாரு!

ஆடிபட்டு துன்ப அனல்பட்ட தற்குள்
ஆசையாத நெஞ்ச உரங்கொண்டு
அழிவுக்குள் மீளும் அகஓர்மம் பூண்டு
அவலத்தைக் கொன்று முடிகொண்டு
இடிதாங்கியாக இடர்தாங்கும் உள்ளம்
இனிவெல்ல நல்ல வழிகண்டு
இளமைகள் அற்ப மெனமாழும்…நோயை
எரிப்போமே…வாழ வழியண்டு.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply