Category Archives: கவிதைகள்

ஓரறிவும் ஆறறிவும்.

மரத்திற்குத் தெரியுமா அதனின் இலையுதிர்வு? மரங்கள் உணருமா இலைகளின் பிரிவுவலி? இயல்பாய் முதிர்ந்த இலையின் உதிர்வு…மர உயிரை உலுப்புமா? இல்லை எதும் சலனம்

Posted in கவிதைகள் | Comments Off on ஓரறிவும் ஆறறிவும்.

வரவேணும்…வரம்வேணும்!

கவிதை எழுத வரிகள் நனவில் கனவில் மனதில் தருவோனே. கருணை பொழியும் விழியின் வழியில் கருமம் நிகழ அருள்வோனே. புவியில் எனது பொருளும் பொலிய புதுமை நிதமும் சொரிவோனே.

Posted in கவிதைகள் | Comments Off on வரவேணும்…வரம்வேணும்!

மறக்குமோ?

நெஞ்சிலே நிதம் சஞ்சலம் எழ நிம்மதி… மனம் கேட்டதே! நீசமே தரும் வெவ்விதி…எனை நித்தம் சிப்பிலி ஆட்டுதே! அஞ்சல் என்றெனை ஆதரித் திட ஆருமில்லை அயலிலே!

Posted in கவிதைகள் | Comments Off on மறக்குமோ?

கனவின் சிறகுகள்

சிறகுகட்டி எங்கெங்கோ சென்று வரும் கனவு! வெறும் காலால் மட்டும் இவ்வளவு வேகமாக வெவ்வேறு திசைகட்கு விரைந்தேக முடியாது! அவ்வளவு வேகமாக அடுத்த அடுத்த நொடி

Posted in கவிதைகள் | Comments Off on கனவின் சிறகுகள்

ஏன் தான் நிமிரலை இன்னும்?

துன்பம் எனும் கடல் ஏறிக் கடந்திட தோணி கிடைத்திட வில்லை- அட துடுப்பும் அகப்பட வில்லை -கடற் தண்ணியைத் தாண்டிட நீச்சல் தெரியலை தாங்கி முக்குளிக்குமெம் எல்லை – தாண்டின் தாழ்வோம்…எதும் மீட்சியில்லை!

Posted in கவிதைகள் | Comments Off on ஏன் தான் நிமிரலை இன்னும்?

மந்திர என் கவி

வானமும் வையகமும் -என்றும் வாழ்த்தும் படி வரம் கேட்டிடுவேன். ஞானத்தின் பேரொளியில் – தோய்ந்து நாளையை ஆளும் முறைதெரிவேன். ஈனங்கள் போக்குதற்கு -இன்றும் என் செய்ய வேண்டுமென்றே முயல்வேன்.

Posted in கவிதைகள் | Comments Off on மந்திர என் கவி

கனாக்கள்

கோடி கோடி கனாக்கள் எழும் விழும். கோடியில் சில தானே பலித்திடும். கோடி கோடி கனாவில்…அனேகமாய் குலைந்து கலைந்து பலதும் மறைந்திடும். ஆழ்ந்த துயிலில் அலைக்கும் கனாக்களில் அனேகம்…அர்த்தங்கள் அற்றே சிதறிடும்.

Posted in கவிதைகள் | Comments Off on கனாக்கள்

பயன்

அறிவு வளர… ஆணவமும் தன்முனைப்பும் பெருகும். பிறரையெல்லாம் பேயரென்று பரிகசிக்கும். மேவும் அறிவாலே,

Posted in கவிதைகள் | Comments Off on பயன்

ஏன் தான் நிமிரலை இன்னும்?

துன்பம் எனும் கடல் ஏறிக் கடந்திட தோணி கிடைத்திட வில்லை- அட துடுப்பும் அகப்பட வில்லை -கடற் தண்ணியைத் தாண்டிட நீச்சல் தெரியலை தாங்கி முக்குளிக்குமெம் எல்லை – தாண்டின் தாழ்வோம்…எதும் மீட்சியில்லை!

Posted in கவிதைகள் | Comments Off on ஏன் தான் நிமிரலை இன்னும்?

கவிப் புகழ்

காலனை வென்றவன் யாரெனக் கேட்டிடில்… “கவிஞனே” என்றிடும் ஊரு. கற்பனைக்குள் பல அற்புதம், அதிசயம் காட்டிடும் அவன் திறம் பாரு. சீலமும் ஞானமும் செம்மையும் கொண்டவன் சிந்தையில் ஊறிடும் ஊற்று…

Posted in கவிதைகள் | Comments Off on கவிப் புகழ்

காத்திருப்பு

“மீட்பர் பலபேர் விரைந்து வருவார்கள். காலத்தை மாற்றுகிற களவீரர் படைவரிசை புடைசூழ எழுவார்கள். பொழுதை நிஜமாக விடியவைக்கும் யுகபுருஷர்

Posted in கவிதைகள் | Comments Off on காத்திருப்பு

கனவு காண(ன)ல்

என்னென்ன கனாக்கள் இனிமேல் பலித்திடுமோ? என்னென்ன கனவுகள் இனி நனவாய் மாறிடுமோ? எந்தெந்தக் கனாக்கள் இடையில் கலைந்திடுமோ?

Posted in கவிதைகள் | Comments Off on கனவு காண(ன)ல்

நாயகன்

தீயவர்கள் சேர்ந்து நின்று தீமைசெய்யும் போதிலும், தேடியே துயர் விதைக்கத் திட்டந்தீட்டும் போதிலும், வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும், வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும், நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய்.

Posted in கவிதைகள் | Comments Off on நாயகன்

தடம்

என்னுடைய காற்தடங்கள் எனது வழியெங்கும் விரவிக் கிடக்கிறது. அது மண் ஒழுங்கையிலும், ஊர்த் தார் வீதியிலும், சீமெந்துத் தரையினிலும்,

Posted in கவிதைகள் | Comments Off on தடம்

கனாக்கள்

கோடி கோடி கனாக்கள் எழும் விழும். கோடியில் சில தானே பலித்திடும். கோடி கோடி கனவில் அனேகமாய் குலைந்து கலைந்து பலதும் மறைந்திடும். ஆழ்ந்த துயிலில் அலைக்கும் கனாக்களில் அதிகம் அர்த்தங்கள் அற்றே சிதறிடும்.

Posted in கவிதைகள் | Comments Off on கனாக்கள்