Category Archives: கவிதைகள்

முகிலாகுமா மனது?

மலைகளில்..முகில்கள் வந்து குந்தி இளைப்பாறி களைதீர்க்கக் கண்டுள்ளேன்! கைகளுள் கரைந்து போகும் இவைகளை…இவற்றின் இயல்பை… பரவுகிற

Posted in கவிதைகள் | Leave a comment

சொர்க்கம் நரகம்?

சொர்க்கலோகம் என்ற ஒன்று பூமி தாண்டி இல்லையே! சூழும் நரக லோகம் கூட தூர எங்கும் இல்லையே! சொர்க்கலோகம் சென்று வந்தோர் சொன்னதேதும் இல்லையே! துயர நரக லோகம் சென்று மீண்டோர் சொல்வதில்லையே!

Posted in கவிதைகள் | Leave a comment

சுடர் வாழ்வு

காற்றடித் தணைக்க கடும் முயற்சி செய்ய…தனை ஏற்றத் துடிக்கும் விரல்களுக்கு துரோகமற்று எண்ணை உண்ட திரியில் எப்படியும் பற்றி மூளும் சின்னச் சுடர்போல்…சிரமம் தான் நம் வாழ்வு!

Posted in கவிதைகள் | Leave a comment

நஞ்சூறிய காலம்

நஞ்சூறிக் கிடக்கிறது நமதுணவு! இன்றைக்கும் நஞ்சூறிக் கிடக்கிறது நாங்கள் குடிக்கும் நீர்! நஞ்சூறிக் கிடக்கிறது நமது மருந்துகள்! நஞ்சூறிக் கிடக்கிறது நமதுநிலம்! இன்றெங்கும்

Posted in கவிதைகள் | Leave a comment

பெளர்ணமிப்பா!

உடலின் அசதிக்கும்; உயிர் மனது பகல் முழுதும் அடைந்த வலி காயம் அத்தனைக்கும்; ஒத்தடங்கள் கொடுத்துக்கொண் டிருக்கிறது தன்(ண்)ஒளியால் குளிர்நிலவு!

Posted in கவிதைகள் | Leave a comment

பாச் செடி

நானோர் பூச் செடிபோலே கவிப்பூ நிதம் பூப்பேன்! யார் பூவை இரசிப்பார்கள்? யார் அழகில் மகிழ்வார்கள்? யார் வாசம் முகர்வார்கள்? யார் தேனை எடுப்பார்கள்?

Posted in கவிதைகள் | Leave a comment

வேர்களை மறந்து

வேர்களின் வாழ்வு பற்றிவிரிவாகப் பேச மாட்டீர்.வேர்களின் மூச்சைக் காக்கும்விதம் பற்றி நினைக்க மாட்டீர்.வேர் வாழக் காற்றும் நீரும்வேணும்… நீர் உதவ மாட்டீர்.

Posted in கவிதைகள் | Leave a comment

இயற்கையோடு இயை!

என்னுடன் கூட எழுந்து வரும் வெயில். எந்தன் பாதையைக் குளிர்த்தும் திடீர் மழை. என் விழிக்கு வழி காட்டும் சுடர் ஒளி. என் முகம் புத்துயிர்க்கத் தொடும் பனி. என் சகபாடி யாகும் சுழல் காற்று. என் துணை, சக பயணி எனும் முகில்.

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை

கால்கள் இன்றைக்கும் ஓய்ந்திட வில்லையே. கைகள் இன்றும் களைத்ததும் இல்லையே. வாய்கள் ஊமையாய்ப் போனது இல்லையே. மனங்கள் என்றும் மயங்கிய தில்லையே. தாகம், பசி, நோ, தணியாத போதிலும் தவிப்பின் ஏக்கம் அடங்கிட வில்லையே.

Posted in கவிதைகள் | Leave a comment

கண்ணீர்க் குமுறல்

கண்ணீர்த் துளி சிறிது. கடல் கோடி தரம் பெரிது. என்றாலும் உங்கள் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் ஒன்றல்ல இரண்டல்ல ஒரு நூறு துயர்க்கடலைக்

Posted in கவிதைகள் | Leave a comment

துயில்

மூன்றாம் பிறையினது மூலைகளில் கயிறிணைத்துத் தூளிகட்டி உன்னைத் துயிலவைக்க நான் நினைக்க… மூன்றாம் பிறையே முழுத்தூளி என என்னை

Posted in கவிதைகள் | Leave a comment

மாற்றம்

திடீரென்று காற்று திசையினை மாற்றிற்று! அடித்திங்கு நின்றகாற்று அப்பக்கம் போயிற்று! என்ன குழப்பம்? எம்மீது ஏன் கோபம்? என்னதான் காரணம்?

Posted in கவிதைகள் | Leave a comment

இரவு

இரவினது மெளனத்தைக் கலைத்தது பெருமூச்சினோசை. கருமிருளில் புதைந்துளன கணக்கற்ற ஏக்கங்கள். கவியும் குளிரில் களைத்து அடங்கிடுது அவிந்த இதயத்தின் அனல்.

Posted in கவிதைகள் | Leave a comment

தவிர்த்துச் செல்.

எழுதாதே கவிதைகளைத் தினமும் என நீ சொன்னாய். சுவாசிக்க வேண்டாம் நீ தொடர்ந்து எனச் சொன்ன மாதிரி இருந்தது… என் கவியே என் சுவாசம்!

Posted in கவிதைகள் | Leave a comment

பொய்மைகள் என்றுதான் போகும்?

உண்மையாக உழைத்துக் களைப்பவன் உரிமை, ஊதியம், பலன்கள், கவுரவம் என்பவை இன்றி அவமதிக்கப் பட ஏய்த்து மேய்ப்பவன் பொய்வேடம் பூண்பவன் தன் நடிப்பால் உலகை மயக்குவோன் தகுதிகள் அற்றும் தலைவனாய் மாறுவான்!

Posted in கவிதைகள் | Leave a comment