(இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக சென்ற 12 பெண்களின் சடலங்கள் சவூதி அரேபிய
பிணவறைகளில் —அண்மைய செய்தி)
தேட்டம் உனதுழைப்பால் திரளும்எனக் காத்திருப்பர்
வீட்டின் தலைவர்
விளையாடும் பிள்ளைகள்,
வாழ்வை நகர்த்த Continue reading
(இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக சென்ற 12 பெண்களின் சடலங்கள் சவூதி அரேபிய
பிணவறைகளில் —அண்மைய செய்தி)
தேட்டம் உனதுழைப்பால் திரளும்எனக் காத்திருப்பர்
வீட்டின் தலைவர்
விளையாடும் பிள்ளைகள்,
வாழ்வை நகர்த்த Continue reading
நீரற்று வாடும் நிஜப்பயிர்க ளாய்… நீவிர்
தார்வீதி வெயிலில்
தளிர்போல் வதங்குகிறீர்!
வரண்டு இலையுதிர்த்த மரங்களென
உடைகளைந்தீர்!
வெறுங் கோவணம் பூண்டீர்
வரங்கேட்டுத் தவஞ்செய்தீர்!
எலிகளும் பாம்புகளும் எத்தனையோ படிமேலாய்…
இறந்தபின் நிம்மதியாய் இருக்க
இறந்தஅவை
கௌவிக்…
கிடைக்காத நிம்மதி நியாயத்தை
எவ்வாறேனும் பெறவே பசிப்போர் புரிகின்றீர்!
பொறுக்க முடியாமல்
பொத்திவைத்த மானத்தைத்
துறந்துங்கள்…
வாழ்வின் நிர்வாண நிலைசொல்ல
நிர்வாண மாக நின்றீராம் டில்லியினில்!
மண்டையோட்டு மாலைபோட்டீர்,
மண்சோறு தான் தின்றீர்,
பாதிமீசை மழித்தீர், பாதிமொட்டை அடித்தீர்,
தாலி அறுத்தீர்
கைவளையலை உடைத்தீர்,
சாட்டையால் உங்களைநீர் சரமாரியாய் அடித்தீர்
குத்துக் கரணமிட்டடீர்,
குமரிகள்போல் சேலையினைக்
கட்டியும் போராடி கவனத்தை ஈர்க்க நிற்பீர்!
ஊருலகம் கண்டு உமக்கிரங்க
ஏதேதோ
வேலைகளில் மூழ்கிற்று ஆழும் உயர்வர்க்கம்…
ஏனென்று கேட்கவில்லை இளகவில்லை
ஆட்சிபீடம.;…
ஊருக்கே சோறூட்டும் உழவனின்–
இழுக்கின்ற
சேடத்தைச் சீராக்கும் சிரத்தையற்று,
அவர்களது
தேவைகளைக் கேட்கும் திராணியற்று,
அம்மணத்துச்
சாமிகளை, நடிகைகளைச்
சமஸ்த்தானத்தில் ஏற்றி
ஆலாத்தி எடுத்தபடி ஆணவமாய்…
அதிகாரம்!
சாதுவான பிராணிபோலத் தான் வெய்யில்
இருந்ததன்று!
வீட்டுநாய் போல
வாலைக் குழைத்துவந்து
ஈரமென்றும் வெக்கையென்றும் இல்லாது Continue reading
சென்ற நாட்களைக் கணக்கில் எடுக்கையில்
செந்தமிழ்ச் சுவை பற்றி நினையாத,
வென்ற நம் தமிழ்க் கவிதை பயிலாத,
வேறு வேறு புதுமை புகுத்தியே
நன்றெனக் கவி செய்து மகிழாத,
நாளெலாம் பயனென்றுமே இல்லாது
சென்ற நாட்கள்தான் என்பேன்: தமிழனாய்ச்
சிறந்திடாத நாள் வீண்நாள் உரைக்கிறேன். Continue reading
சின்ன உணர்வுக்கே
சுழன்றடிக்கும் கைகளுக்குள்…
இரத்தம் உறுஞ்சுவதைக் கண்டால்
விரல் அம்மி
குழவியில் அரைத்தே சம்பலாக்கத்
துணிபவர்முன்…
உயிரைப் பணயமாக வைத்து
தனைக்கொல்லும்
பசியை எப்படியும் தணிக்கத் துடிதுடித்து
ஒருநேர ஒருவேளை உணவை
உண்டாறுதற்குள்
நுளம்புகள் படும்பாடு
யார்பட்டார் இவ்வுலகில்?
விபரம் தெரியாதோர் விபரீதம் தேறாதோர்
இதுநல்ல முடிவென்று,
இதுஅருமை மாற்றமென்று,
இதைவிட ஒன்று இனிக்கிடைப்ப தரிதென்று,
அனுபவங்கள் அற்றுக் களிக்கின்றார் Continue reading
முறித்திருக்க வேண்டும் முளையினிலே
வளர்ந்தபின்தான்
அறிய முடிந்தது நீ…முட் செடியென்று!
இளமையிலே முட்களை எப்படி மறைத்துவைத்தாய்?
வளர வளரச் செடியே முள் ஆகிநின்றாய்!
முள்ளாற்தான் முள்ளை Continue reading
சிறப்போ டிருக்கையிலே,
புகழ்குன்றாப் பொழுதினிலே,
மரியாதை கிடைக்கையிலே,
மதிப்பும் தொடர்கையிலே,
வெறுப்பு வருமுன்பே, Continue reading
சாய்ந்துதான் போனது தலைமுறை தலைமுறையாய்
வேரோடி விழுதெறிந்து நின்ற
குலவிருட்சம்!
சாய்ந்ததுதான் தாமதம்…
தடதடென்று கிளைகளினை
யார்யாரோ வந்து பங்குபோட்டு வெட்டிவிட்டார்! Continue reading
கரைமணலில் நண்டு கால்களினால்
எழுதுகிற
கவிவரியின் அர்த்தமெது?
அதன் ‘தலைப்புத்’தான் என்ன?
அந்தக் கவிதைகளை அனைவரும் பார்த்துவிடக்
கூடாது என்று Continue reading
உண்மை சிறையிருந்த தித்தனைநாள்!
நீ…அதனால்
இன்றுவரை சுதந்திரனாய் எதுஞ்செய்தாய்!
சிறையிருந்த
உண்மை வெளிவந்த சிலநாளில்
இன்று…சிறை Continue reading
காற்றின் இழைகளைத்
தென்னோலையாய் எண்ணி
நேற்றிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்த
அந்த இரு தும்பிகளும் அசராமல்
இன்றைக்கும் Continue reading
உனக்கு… எந்தன் கவிபிடிக்க வில்லை என்றாய்.
உன்கணிப்பில்… என்கவிதை மட்டம் என்றாய்.
உனக்கு…எந்தன் கவிவடிவம் தூரம் சொன்னாய்.
உனக்கு… எந்தன் கவிக்கொள்கை கசக்கும் என்றாய்.
உனக்கு… எந்தன் கவிப்பொருளோ “குப்பை” என்றாய். Continue reading
நீதொழுத கைகளுக்குள் நின்றதொரு கூர்வாள்!
நீசிரித்த சிரிப்புள்ளே
ஒளிர்ந்ததொரு தீயஎண்ணம்!
நீபார்த்த பார்வைக்குள் நிழலாடும் பகைமைத்தீ!
நீஅழுத கண்ணீரில் Continue reading
நீதி நிஜமாய் உதிக்காத காலையில்,
நியாயம் நம்மை நெருங்காத வேளையில்,
சோகம் யாவும் வடியாப் பொழுதில், நம்
சோதரர் துயர் முடியாக் கணத்தில், எம்
வீடு-பேறும் விளங்கா நிலையில், ஊர்
விதி; எதிர்காலம் புரியாக் களத்தில், ‘தை Continue reading