பாடும் மீன் பட்டங்கள்

நீல நிற, தெளிந்த வானோர் நெடுங்கடலாம்!
கோல முகில்கள்
அதில் அலைகளாய்க் குமுறும்.
வானத்தில் பட்டங்கள்
வாலசைத்து மீன்களென… Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

உண்மைகளைத் தவிர…

உண்மைகளைச் சொல்கின்றோம் உண்மைகளாய்
எனச்சொன்னார்!
உண்மைகள் உறங்கியபின்,
உண்மைகள் அடங்கியபின்,
உண்மைமௌனித்த தன்பின், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மழை வீணை

மழையோர் மிகப்பெரிய வீணை..அதன்
நீர்த்தந்தி
தனைக்காற்று மேதை
தனித்துவமாய் மீட்டிவிட
எத்தனை இனியஇசை எழுகிறது?
முகில்களெல்லாம் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கவிதைக் கவலை

நாளை என்ன கவிதைகளை
நான் எழுதப்போகிறேன்?
ஏதும் அறியேன்.
நாளையா? மறுநாளா?
தேடி வரும் கனவாய் சேரும்..கவி? அறியேன்!
எண்ணத்தில் அலையடிக்கும்
எந்தெந்தச் சொற்துளிகள் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

ருசி

பச்சை மலையின் ருசியைப் பகர்கிறது
பொச்சடித்து நானும்
சுவைத்த சுடுதேனீர்!
கடலின் ருசிதன்னைக் காட்டி மணக்கிறது
சுடச்சுடச் சொதிபொரிய லுடனிணைந்த
மீன்குழம்பு! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

ஞான நல்லூர்

ஞானநதி இயல்பாய்ச் சுரக்கும் மடி. பாணன்
யாழ் மீட்டிப் பெற்ற நகரின்
தலைமைஊர்.
யாழ்ப்பாணத் தமிழின், சைவத்தின்,
பண்பாட்டின், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பிரியாவிடைக் காவியம் (நெடுங் கவிதை)

(30.10.1995 நிகழ்ந்த வரலாறு காணாத ‘வலிகாம இடம்பெயர்வைத்’ தொடர்ந்து இடம்பெயர்ந்து பளையில் இருந்தபோது 02.01.1996 அன்று எழுதியது)

அம்மா தமிழ்த்தாயே! அகிலத்தின் எழிலரசி!
பம்மாத்தால் அன்றிப் படைப்பலத்தால் ஆண்டவளே!
முச்சங்கம் கண்டும்.
மூப்புநரை காணாது
தற்சமயம் கூட தளிர்த்தொளிரும் நித்திலமே! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மயான மனசு

ஒவ்வொரு மனிதருள்ளும் ஒருகோடி ஆசைகள்!
ஓவ்வொரு மனதினுள்ளும்
பலகோடி ஏக்கங்கள்!
ஆசைகள் திரண்டு காற்றாய் அடித்தலைக்க,
ஏக்கங்கள் சேர்ந்து சூறைகளாய் விரட்டப்,
போகும் சருகுகளாய்

Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கடவுளா காசு?

காசே கடவுளென்று நேற்றக் கணம்மட்டும்
போற்றிப் புகழ்ந்தீர்!
அது வெறும் கடதாசிக்
குப்பையென
அதனின் ‘பெறுமதி உயிர்ப்புதனை’ Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

காணாமல் போன கனவு

‘தமிழ்மாறன்’ அவனின் தவப்பெயர்.
பெயர்க்கேற்ப
‘தமிழ்-மாறன்’ தானவனாம்…
தமிழ்நிலத்தைக் காதலித்தோன்.
அமிழ்தை விடஇனியன். Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

அழுக்கு

அழுக்கை மிதித்தது செருப்பு…
நீரூற்றிக்
கழுவினேன்:
புதிதைப்போல் கலக்கிற்று அது! நேற்று
அழுக்காச்சு உடுப்பு…
அலம்பித் துவைத்துவிட
அழுக்கறுத்து வெண்மை பளீரிட்டது அது! இன்று
அழுக்காச்சு உடம்பு…
அருவருப்பை மறந்துநன்றாய்
முழுகிக் குளித்தேன்:
முழுதும் புனிதமாச்சு!
அழுக்காகும் மனது அனுதினமும்…
என்செய்து
அழுக்கறுத்து தூயதாக்கு வேனோ?
அறியாது
அழுக்கேறி… வழிதேடி…
அலைகிறது என்மனது!

Posted in கவிதைகள் | Leave a comment

முற்றுப் புள்ளிகள்?

அமைதிக் கதைக்குவைக்கப் பட்ட
குருதிதோய்ந்த
இரு ‘முற்றுப் புள்ளிகளா’ நீங்கள்?
பொதுவாக
ஒரு ‘முற்றுப் புள்ளி’ முடிவு:
நும்மரணம் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பாவம்

“மந்திரச் செபத்தாலே மாறிவிடும்
இல்லையெனில்
அந்த உயிரிறைவன் அடியினையே சென்றுசேரும்.
எந்த மருத்துவமும்
இதைத்தடுக்க முடியாது. Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பிறவி

கடலில் விழுகிறது மழையின் துளியிலொன்று!
கடலோடு ஒப்பிடையில்
மழைத்துளி மிகச்சிறிது!
கடலில் அதுவிழுந்தால் கடலினிலே மாற்றமேது?
கடலின் அளவில், சுவையில்,
அதன் நிறத்தில், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

போய்க் கொண்டிருக்கின்றோம்

போய்க் கொண்டிருக்கின்றோம்:
போகும் திசையறியாது
போய்க் கொண்டிருக்கின்றோம்:
மனவழியில் கால்போகப்
போய்க் கொண்டிருக்கின்றோம்:
வாழ்வில் எப் பிடிப்புமற்றுப்
போய்க் கொண்டிருக்கின்றோம்: Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment