மழைப் பேச்சு

ஓயாமல் பகலிரவாய் உளறிடுது வானமழை!
கோபத் துடனெனினும் குளிராய்த்தான்
ஊரினது
காது செவிடுபட
கத்திக்கொண் டிருக்குதின்று!
யார் கேட்பார் என்ற கவலையற்று
வாய் உழைய
ஓர் ‘சில் வண்டாய்’ இடைவிடா திரைகிறது!
வீடுகளில் ஜன்னல் கதவுகளில்
துளி எச்சில்
மோத முழங்கிடுது முறைத்து!
கண்களிலே
கோபமின்னல் வெட்டித் தெறிக்கக்
குமுறி …எங்கோ
ஏதோ ஓர் மேசையில் இடித்தும்
முழங்கிடுது!
“கேட்கோமோ” எனக்காத்துக் கிடந்து
நனைந்து தோய்ந்த
அயலெல்லாம்… மழைப்பேச்சுக்கு
அஞ்சி வீட்டுள் ஒதுங்க…,
வெயிலினது திட்டைமட்டும் வேண்டி
வெடித்துலர்ந்து
உயிர்வரண்ட மண்ணும்
உதிர்ந்து காய்ந்த மரம் செடியும்
மேனியெல்லாம் காதாக்கி
மழைப்பேச்சைப் பருகி நிற்க…,
ஓரிரு சொல் கேட்டே உயிர்க்கத்
தவித்த வயல்
நாற்றழுகி முளை அழுகி ஜலசமாதி ஆகிடுது! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மீள் நடுகை

வானில்வாழும் நீராவி
முகில்களெனும் வண்டியேறி,
கூதலில் குளிர்ந்தொடுங்கி,
குதித்துத் துளிகளாகி,
காற்றின் தெருக்களில் கால்நடையாய் வழுக்கி,
தூரப் பயணமாகி, Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சுடர்களின் காலங்கள்

சுடரொவொன்றும் சூரியனாய் சுடர்ந்த
தொரு காலம்!
“புதைந்த கனவொவொன்றும் போய்ச்
சுடரில் முகம் காட்டி
ஒளிருமெனும் நம்பிக்கை தனில்
உயிர்த்த தக்காலம்! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சிறை (த்) தாய்

ஒருவேளை முக்குருத்தில் ஒன்றே
வளர்ந்துயர்ந்து
இருநூறு கோடிசேர்த்து
எக்கடனும் அடைத்திருக்கும்….
ஏன் அதற்குள் மரணத்தை இவைக்கும்
பரிசளித்தாய்? Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நாவல் ஆச்சி

நாவற் பழங்கள் நம் ஊரின் ‘பெரி’ப் பழங்கள்.
நாவற் பழங்கள்
நம் தமிழின் ருசிப்பழங்கள்.
நாவற் பழத்துக்கும்
நம் ஆச்சி மாருக்கும்
யாது தொடர்பு..நம் ‘ஒளவை’ முதற்கொண்டு ?
பார்த்தேன் யான்… Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

முக ‘வரி’ 

 

‘ஆட்டுக்கல் அம்மி’ தனில்அரைத்த
தோசை சம்பல்,
‘திரிகையிலே’ பயறு திரித்துசெய்த பலகாரம்,
‘மாற்றுலக்கை’ போட்டுரலில்
இடித்த அரிசிமா அப்பம், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

வீராப்பு 

 
 
நீதியெது நியாயமெது தெரிகிறதா நாளும் ?
நீங்காத சோகம் நம் நெஞ்சிலிடும் கோலம்!
சாதியினால் சமயத்தால் சாகவில்லை ஓலம் 
சாத்தான்கள் கருவறையில்….மனிதமதா வாழும் ?

Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

என் கவிதை

கடவுளையே விமர்சிக்கும் போது…அந்தக்
கடவுளையே மறுதலித்து ஒதுக்கும் போது
கடவுள்மேல் குறைகண்டு கொதிக்கும் போது
கடவுளிலே குற்றங்கள் சாட்டும் போது
கடவுளென்று ஒருவனில்லை என்று கூடக் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

அனிதா

உன் அறிவின் ஆழம்,
உன் முயற்சி, உன் தகமை,
உன்னுடைய ஆற்றல், உனது அடைவு மட்டம்,
உச்சம்தான்….!
ஆனாலும் மூட்டை தினம் சுமந்தும்,
“பிச்சை புகினும் கற்கை நன்றே ” என்ற Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

குற்றம் கடிதல்.

 

கத்தியின்றி இரத்தமின்றிக் கணமும்…முக 
நூலில் …’வாய்
யுத்தம்’ புரிந்துலகை ஊரைத் திருத்திவிட 
கத்திக் குளறி, 
‘சரி –பிழைக்கு’ ஆதரவாய் 
குத்தி முறிந்தபடி,
குமுறி வெடித்தபடி, Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்வு

 

நிதமுமொரு ஏவுகணைப் பரிசோதனை நடாத்தி 
உலகப்போர் நெருப்புக்கு 
நெய் ஊற்றும் ‘கிம் ஜொங் உன்’.
கண்டனமும் தொடர்ந்து கவலையும் தெரிவித்து 
நாசகாரி கப்பல்கள் நகர்த்தி மிரட்டும் ‘டிரம்ப்’.
நவீன இனச் சுத்தி கரிப்பாய் 
மனிதத்தை  Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

தீராப் பலிகள்

யாருடைய தலையை எடுத்து வருகிறாளோ
‘யாழ் தேவி’?
பாவம் என்செய்வாள் அவள் ‘இரும்பி’!
தேடி உனைத்தேடி திரியவில்லை அவள்:
நீயாய்த்
தேடி அவள்வரும் திசைஏறிப் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன் ?

‘சிறுத்தீவுக்’ கடலில்
சிறிய ஒரு ‘குல்லாவில்’
பொறிகளான’ஆறு ‘ ஒரேவயது இளம்புதிர்கள்
உற்சாக பிறப்பு கொண்டாட்ட
மயக்கத்தில் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

ஞான பலம்

இருள்நகர்ந்து கவிவதுவாய், பனியின் மூட்டம்
எழுந்துவந்து மூடுவதாய், மயக்கம் சோர்வு
மருவி எமை விழுங்குவதாய், இடரும் துன்ப
வகைபலவும் அடிக்கடி வந்தென்னை மூடி
இரக்கமற்று வதைக்கும்! என் சுதந்திரத்தை, Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

விதிநீயே….

எது எந்த வேளையில் எனைச்சேர வேண்டுமோ
எழுதிநீ தந்து விடுவாய்.
இடிவீழும் போதிலும் இடியாமல் மீட்டெனை
இதமாயுன் நெஞ்சில் நடுவாய்.
“விதியென்ன” கேட்கையில் “விளைவென்ன” தேடையில் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment