துயில்

மூன்றாம் பிறையினது மூலைகளில்
கயிறிணைத்துத்
தூளிகட்டி உன்னைத்
துயிலவைக்க நான் நினைக்க…
மூன்றாம் பிறையே முழுத்தூளி
என என்னை
ஏற்றிவிட்டாய்; பாட்டில்
என்னே நின் கவிச்சிறப்பு?
தாலாட்டுப் பாடித்
தளிருன்னைத் தூங்க வைக்க
தாலாட்டே நீயானாய் தழுவி;
எனை மறந்தேன்!
சாமரமாய் முற்றத்துத் தாவரங்கள்
தலையசைக்க
நானும் உருவேற்றி நின்றேன்.
தானாய் உருவேறி
நீ அசைவாய் சாமரமாய்…
நிம்மதியாய் நான் துயின்றேன்!
நானுன்னைத் தூங்கவைக்க,
நீ என்னைத் தூங்க வைக்க,
தூங்காத வாழ்க்கைக்குள்
நம்மை என்று
மீட்டெடுப்பேன்?

மாற்றம்

திடீரென்று காற்று திசையினை மாற்றிற்று!
அடித்திங்கு நின்றகாற்று
அப்பக்கம் போயிற்று!
என்ன குழப்பம்?
எம்மீது ஏன் கோபம்?
என்னதான் காரணம்?
இதுவரை இதமாக
வீசிநின்ற காற்று விருட்டென்று
மறுபக்கம்
வீசி…உடல். உளமும்
வேர்க்கவிட்டேன் போயிற்று?
காலம் கிரகம் கோள் மாற்றம்,
கடவுளது
கோலம் குணத்தினிலே மாற்றம்,
தம்பாட்டில்
மானிடர்கள் மண்ணிலே
செய்யும் வகைமாற்றம்,
யாதிதற்குக் காரணம்?
யமனை அழைத்தபடி
காற்று திசை மாறிடுது!
எம்மூச்சைக் கவர்ந்த படி
காற்றெம்மைப் படிப்படியாய்க்
கழுவினிலா ஏற்றிடுது?

இரவு

இரவினது மெளனத்தைக் கலைத்தது
பெருமூச்சினோசை.
கருமிருளில் புதைந்துளன
கணக்கற்ற ஏக்கங்கள்.
கவியும் குளிரில் களைத்து அடங்கிடுது
அவிந்த இதயத்தின் அனல். Read the rest of this entry »

தவிர்த்துச் செல்.

எழுதாதே கவிதைகளைத் தினமும்
என நீ சொன்னாய்.
சுவாசிக்க வேண்டாம் நீ தொடர்ந்து
எனச் சொன்ன
மாதிரி இருந்தது…
என் கவியே என் சுவாசம்! Read the rest of this entry »

பொய்மைகள் என்றுதான் போகும்?

உண்மையாக உழைத்துக் களைப்பவன்
உரிமை, ஊதியம், பலன்கள், கவுரவம்
என்பவை இன்றி அவமதிக்கப் பட
ஏய்த்து மேய்ப்பவன் பொய்வேடம் பூண்பவன்
தன் நடிப்பால் உலகை மயக்குவோன்
தகுதிகள் அற்றும் தலைவனாய் மாறுவான்! Read the rest of this entry »

ஞான வழிக் கலங்கரை

நல்லைக் கந்தனின் கோவில் நிழல் இன்று
‘நாயன்மார்க்கட்டைத்’ தாண்டியே ‘செம்மணி’
எல்லை மட்டும் கவிந்து ஒளிர்ந்தது!
எவர்க்கும் தனது இருப்பிடத்தின் திசை
சொல்லியே வரவேற்றது! கம்பீரத்
தோற்றத்தில் ‘நல்லை வேலாய்’ நிமிர்ந்தது! Read the rest of this entry »

மாற்றம்?

வெளித்துக் கிடக்கிறது வானம்.
கவலையற்றுக்
குளிர்ந்து திரிகிறது காற்று.
வழமைபோல்
ஒளிர்ந்து மலர்கிறது பகல்.
வளங்கள் பெருகி Read the rest of this entry »

வியப்பு

கடல், ஆழி, சமுத்திரத்தை
தன் உள்ளங் கைகளுக்குள்
பிடித்திருக்கும் பூமி!
விரல்களெனக் கண்டம் ஐந்து!
விரல்களின் இடுக்குகளில் விழுந்து
நீர் ஒழுகாமல் Read the rest of this entry »

மரண வலை?

மீண்டும் அயலில் விழுந்ததா மரணவலை?
நீண்ட தனிமை
நிதான ஒடுக்கங்கள்
தாண்டிப் பழையபடி
தன்னிசையை மீட்க…அன்று
நரம்பறுந்த யாழ்…நரம்பைச் சீர்செய்து Read the rest of this entry »

நீளும் இடைவெளிகள்

இடைவெளி பெருகிடுது…
எதை எவர்தான் தீண்டினாலும்
தொடலாம் மரணம்….கை தூர விலகிடுது!
யார்மேல் யார் பட்டாலும்
தொற்று நீக்கி தெளித்து
பேதமின்றிக் கைகூப்பும் பெருமை Read the rest of this entry »

அவதிப் புள்ளி

பாவத்தின் கூலி மரணமென நீ சொன்னாய்!
பாவத்தின் கூலி மரணம்
எனும் மறைநூலும்!
பாவங்கள் செய்யாதோர் பாரினிலே யாருண்டு?
பாவங்கள் யாவுக்கும்
மரணமா பதிலிங்கு? Read the rest of this entry »

அமுதன்

அமுதம் இருக்கிறது….
அதை நீ மலமென்றாய்!
அமுதம் அரிதான பொருள்;
எவரெவர்க்கும்
அமுதம் பெரிதான அருள்;
ஆம் அயலுயிர்க்கு Read the rest of this entry »

இருளைச் சுடும் ஒளி

தீமை இருள் துரத்தி – பல
தீப வரிசை நிரலைப் பரப்பி…நற்
சாம ம் வரை கொழுத்தி – ஒளி
சாலைகள் வீடுகள் எங்கும் சுவறி..ஓர்
கோலம் இட அடுக்கி – மனம்
குளிரும் வரை திருக் கார்த்திகை நாளிலே Read the rest of this entry »

புயற் ‘புரவி’

எங்கிருந்து வந்தது இவ்வளவு மாரி?
எங்கிருந்து வந்தது இந்தளவு வெள்ளம்?
எங்கிருந்து வந்தது இந்தக் கொடுஞ்சூறை?
எங்கிருந்து வந்தது இந்தக் குளிர்க் கூதல்? Read the rest of this entry »

வெல்வோம்

ஏனடா இந்நிலை? இந்த உலகுக்கு
இன்று நோய் சூழ்ந்த வாழ்வு.
எப்படி வந்தது? எப்பழி தந்தது?
எங்கும் இறப்பின் சூழ்வு.
வான்புகழ் கொண்ட நம் வாசலைப் பூட்டிற்று
மற்றோனைத் தீண்டின் தொற்று Read the rest of this entry »

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 101795Total reads:
  • 74562Total visitors:
  • 0Visitors currently online:
?>