Category Archives: கவிதைகள்

மாறாதது

மாற்றமென்ற ஒன்றுமட்டும் மாறிடாது பூமியில் மாறிக்கொண் டிருத்தல்தானே கூர்ப்பின் வேர் இயற்கையில் தோற்றம் மாறும் சொல் செயல் தொடர்ந்து மாறும் வேளையில் தொன்மையும் தனித்துவமும் சிதையுமே எம் சூழலில். பழமையும் கழிந்து சென்று புதுமை பூத்து வந்திடும். பருவம் மாற புதிய புதிய பதில்கள் தேடும் கேள்வியும்.

Posted in கவிதைகள் | Leave a comment

இப்படியே நீழுமா இரவு?

காரிருள் சூழ்ந்து கறுத்துக் கிடக்கிரவு! ஆழ்ந்த அமைதியுள்ளும் அசைந்தூரும் அச்சம் ஐயம். வீசுகிற காற்றினிலும் விளக்க ஏலா ஓர்பதற்றம். காரிருளுள் வேட்டையாட, சாமத்தில் இரைகளினைத்

Posted in கவிதைகள் | Leave a comment

மரணப் புதிர்

எங்கிருந்தோ வந்தான். எவர் விழிக்கும் தெரியான். எங்கு எதால் எப்போ எமைச்சேர்வான் எனச்சொல்லான். ஏழை பணக்காரன், தாழ்ந்தோன் உயர்ந்த மகன்,

Posted in கவிதைகள் | Leave a comment

எழுத்தில் வாழ்தல்!

இலைகளாம் எழுத்தாணி பிடித்துக் கவிதைகளை வெளிவானில் எழுதி விரையும் நிதம் காற்று! இந்தக் கவிதைகள் முகில்களா? இல்லை ஏதோ

Posted in கவிதைகள் | Leave a comment

காற்றினது காலம்

காற்றெழுந்து நன்றாக க் கைகொட்டி எங்களது வீடுகட்கு மேலாய் விரைந்து நடக்கையிலே நேற்றுவரைக் காய்ந்து வெடித்த நிலம் இந்தக் காற்றிடம் மருந்துகட்டும்!

Posted in கவிதைகள் | Leave a comment

கடவுள் தான் நீங்கள்!

கடவுள் தான் நீங்கள். கலிகாலம் கண்கண்ட கடவுள் தான் நீங்கள். காரணங்கள் உண்டு… நீவிர் வரமும் தருகின்றீர் சாபமும் இடுகின்றீர்.

Posted in கவிதைகள் | Leave a comment

விதியல்ல இவர் வாழ்வு!

நம்முன்னோர் செய்பாவம் நாங்கள் சுமப்பதுபோல்… நம்பாவம் தன்னை நம்சேய்கள் சுமப்பதுபோல்… நம்சேய்கள் பாவத்தை அவர் சேய்கள் சுமப்பதுபோல்… யார்யாரோ செய்தபழி யாரோ பொறுப்பதுபோல்…

Posted in கவிதைகள் | Leave a comment

ஊழி?

கருகிக் கிடக்கிறது காடு. கழிவுபல கரையத் துடிக்கிறது காற்று. ஈரமற்று எரிந்து தரிசாச்சு எழில்வயல்கள். நஞ்சூறி

Posted in கவிதைகள் | Leave a comment

பேதம்

எத்தனையோ பேதம் எத்தனையோ பிரிவுகளால் நித்தம் அடிபட்டு நிலைகுலையும் எம்குலத்தில் ஊசியாலும் வந்திடுமோ அடுத்த உயர்வு தாழ்வு? ஊசியிட்டோர் ஓர் பிரிவு,

Posted in கவிதைகள் | Leave a comment

என்று வென்று வாழுவோம்?

கோடி செல்வ முத்தினில் குளித்தெழுந்த துன்பெயர். கூடி நட்பு உறவு சூழ கொஞ்சி நின்றதுன் புகழ். வாடிடாத தோட்டமாய்ச் செழித்ததுன் நனவுகள். வந்த நோயில் வெந்து நீயும் போனதேனோ தனிமையில்?

Posted in கவிதைகள் | Leave a comment

இயற்கையின் கண்ணீர்

கப்பல்களின் சுக்கான்கள் ஏர்களென உழ…கடலில் உப்பும் பலகோடி உயிர்களும் நிதம் விளையும்! கடலின் படைகள் அலைகள் காண்; அவை நிரையாய் அடுத்தடுத்துத் தாவி

Posted in கவிதைகள் | Leave a comment

மீண்டென்றெம் வாழ்வு வாய்க்கும்?

காலங்கள் மாறிடும் கோலங்கள் மாறிடும் கனவுகள் மாறி உதிரும் கண்களின் காட்சியும் கவிதையின் கோணமும் கருத்ததும் மாறி அதிரும் ஞாலத்தின் வாழ்வியல் மாறிடும் …நீதியும் ஞாயமும் மாறி மறுகும்

Posted in கவிதைகள் | Leave a comment

என்றுதான் மாறும் எம் விதி?

ஒருகோடி துன்பங்கள் தருகின்ற காலத்திற்- குண்மையாய் இரக்க மிலையா? உயிரதும் இதயத்தில் உருக்கமும் கருணையும் உளத்தில் ஈரமுமில்லையா? தருகின்ற துன்பங்கள் தம்மையோர் இடைவெளி தனில் தரும் குணமுமிலையா?

Posted in கவிதைகள் | Leave a comment

என்ன செய்யப் போகிறோம்?

காலகாலமாக நம்மைக் காத்திருந்த தெய்வமும் கையை விட்டகன்றதெங்கு? மாய்கிறோமே நித்தமும். ஆலகாலம் உண்டு அன்று அன்பர்உயிர் மீட்டதும் அற்புதம் புரிந்ததும் மறந்ததேன்…அதன் மனம்?

Posted in கவிதைகள் | Leave a comment

எப்படித்தான் கிளைக்கும்?

மரணத்தின் தூதுவர்கள் வருகின்றார் மிக அருகில்! எருமைகளில் அல்ல எவரின் கண்ணும் காணாக் கிருமிகளில் ஏறிக் கிளைக்கின்றார் திசை திக்கில்! எமனெறியும் பாசக் கயிறு

Posted in கவிதைகள் | Leave a comment