என்னதான் மிஞ்சும்?

‘A’ வந்து போனார் இருநாளின் முன்; இங்கே
‘B’ வந்தார் நேற்று;
இன்றைக்குப் பின்னேரம்
‘C’ வந்து கூட்டம் போடுவதாய் அறிவிப்பு!
இந்தமுறை… ஆங்கில
இருபத்தா றெழுத்து தாண்டும் Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on என்னதான் மிஞ்சும்?

எப்படித்தான் ஓடிற்று இருபத்தேழு நாட்கள்?

வில்லங்கம் ஏதுமின்றி வெகு விமரிசையாக
‘நல்லூர்த் திருவிழா’
நடந்து முடிந்ததென
நிம்மதிப் பெருமூச்சு நிறைகிறது! Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on எப்படித்தான் ஓடிற்று இருபத்தேழு நாட்கள்?

யானிருப்பேன் என்று…

என் வாழ்வில்; நாற்பத்தைந் தாண்டின்மேல்…
யான் பிறந்த
என்நல்லூர் மண்ணிருந்து
‘எனக்கு நினைவு
என்று தெரியத் தொடங்கியதோ’ அன்றிருந்து…
கண்டு சிலிர்த்துள்ளேன்… Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on யானிருப்பேன் என்று…

காவல் தெய்வம்

காலனாக வந்து மண்ணில் வாழுகின்ற வைரவர்.
காவல் நின்று ஊரை வாழ்த்தும் ‘மண்டையோட்டு மாலையர்’.
சூலம் வீசி தீ நுதல்களாலே தீமை தீய்ப்பவர்.
தொல்லை செய்யும் மாய மந்திரம் துரத்திச் சாய்ப்பவர். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on காவல் தெய்வம்

அனுதினமும் அலங்காரம்.

‘அலங்காரக் கந்தனுக்கு’ அனுதினமும்…
விதவிதமாய்
அலங்காரம்!
வெவ்வேறு அழகு நிற மலரில்
மாலை புனைந்து;’சாத்துப் படி’
வடிவாய்ச் சோடித்து; Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on அனுதினமும் அலங்காரம்.

காத்து நமையுயர்த்து!

நெஞ்சின் கவலையிடர் நீறவைத்து,
நம்மனதின்
சஞ்சலங்கள் சாய்த்து,
தலைகோதி மெய்வருடித்
தஞ்சமும் தந்து,
தழுவிடுவான் நல்லூரான்! Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on காத்து நமையுயர்த்து!

இருபத்து நான்கு ஆண்டின்பின் இன்று….

அந்த இனியகாலம் அகன்று மறைந்துபோய்
இன்று ‘இருபத்து நான்காண்டு’!
‘அது’ எங்கள்
வாழ்வின் வசந்தகாலம்.
மனம் துள்ளிக் குதித்த காலம்.
கால் கையில் தளைகளற்று, Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on இருபத்து நான்கு ஆண்டின்பின் இன்று….

அரண் செய் ( நல்லைக் கந்தர் அநுபூதி)

திரு நல் லையதன் திருநாள் களிலே
திசைகள் அளந்து தினம் சுற் றிவரும்
கருணைச் சுடரே! கதியற் றுழல்வோர்
கவலை களைநீ களைவாய் களையாய்! Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on அரண் செய் ( நல்லைக் கந்தர் அநுபூதி)

பன்னிரெண்டு கண்திறந்து பார்

பன்னிரெண்டு கண்திறந்து பாவிகள் எங்களினை
இன்றைக்குப் பாரைய்யா!
என்றென்றும் பாருமையா!
நெற்றிக்கண் நெருப்பிருந்து நிலைத்து , ‘மும் மல’ அசுரர்
பற்றி எரியவைத்த பரம்பொருளே… இன்று நம்மில்
தொற்றும் துயரெல்லாம் சுடு; Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on பன்னிரெண்டு கண்திறந்து பார்

கிளியானதென் மனது

சூழ்ந்த பகற்திரவம் சொட்டுச் சொட்டாய் வடிய,
சூழும் இராத்திரவம் துளித்துளியாய்
வழிந்துவர,
பொன்னந்தி கருக,
மைம்மற் புகார் மூட,
மென்குளிர்க் காற்றுவீசி மேனி Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on கிளியானதென் மனது

இன்று…

‘இந்த நேரத்தில் ……தான்’.
‘சனாதிபதி……தான்’.
‘வெல்லும்……..’
‘தேசமே பயப்படாதே’.
‘…….. விரட்டுவோம்’.
எங்கள் தோழர்….., Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on இன்று…

கம்பன் கழகமெனும் கலை விருட்சம்

நாற்பது ஆண்டின்முன் நாற்றாய் எழுந்து…வந்த
காற்று, புயல்,மழையைக் கடந்து…
தினம் தினமும்
கிளைத்துத் தளைத்துக்
கெதியாய் மரமாகி,
வளர்ந்து விருட்சமாகி, Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on கம்பன் கழகமெனும் கலை விருட்சம்

உயிர்ப்பழியா இசை.

இசையின் இதம் நீ;
உயிர்ப்பென்றும் குன்றாத
இசையின் பழமை, எழில், நவீனம் நீ;
அழியாத
இசையுன் இசை! வயது மூப்புவந்தும்
இளமைகுன்றா Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on உயிர்ப்பழியா இசை.

குளிர்த்திப் பொங்கல்.

ஆர்க்கும் பறையதிர்வு அயலை உருவேற்ற…
தீச்சட்டி, அடுக்குத் தீபம்,
கொழுந்துவிட்டு
நூரா தொளிர…
கரும்புகையும், கற்பூர
வாசமும், சாம்பிராணி மணமும், Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on குளிர்த்திப் பொங்கல்.

பிழை பொறு.

பசுமைகள் பூசியே படரும் பொன் வயல்களும்
பரவி ‘இங்கிதம்’ தந்திடும்.
பலசாலி நானெனப் பவிசோடு முகம் காட்டி
பனை சுற்றி அணை போட்டிடும்.
கசிந்தூறும் கவிதையாய் அருளூறும் பொய்கையுன்
கழல் சுற்றிக் குளிரூட்டிடும். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on பிழை பொறு.