அருள் பொழிந்திடு!

ஊர்வெறித்தது! உள்ளங்கள் எலாம்
உள்ளிடிந்துமே அஞ்சுகின்றது!
வேர் விழுதிலும் தொற்றிடும் பிணி
வீழ்த்த…நாள் தொறும் சா மலிந்தது!
சீரளியுமோ நாளை என்று நம்
சிந்தை வேகுது! நல்லைச் சண்முகன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நீ எல்லாம் பார்த்துக் கொள்ளு!

நீ எல்லாம் பார்த்துக் கொள்ளு!
நீ வரும் தடைகள் போக்கு!
நீ எது சரியோ… செய்து
நிம்மதி அயலில் ஊற்று!
நீ… வேலால்…தொற்றி மாய்க்கும்
நிட்டூரம் வீழ்த்து! கண்முன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றைய எளிய கனா

நாளை என்ன நடந்திடும் என்பதை
நானும் அறியேன்…நீயும் அறிந்திடாய்!
சூழும் என்ன வகையில் துயர் என
தொடர்பில் நிற்பவர் கூடத் தெரிந்திடார்!
வாழ்வின் பயணங்கள் நீளுமோ? நிற்குமோ?
மனதில் ஏக்கங்கள் சேருமோ? தீருமோ? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலச் சதி

தடுப்பு அணைகளினைத்
தம் இஷ்டம் போல் அடித்து
உடைத்துப் பெருக்கெடுக்கும்
ஊரெல்லாம் தொற்றாறு!
எங்கள் திசைகளின் இண்டிடுக்கு
மூலை முடுக்கு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எவரால் இயலும்?

சமூகம் ஒரு திமிர்க்குதிரை…வேகம் கொண்டு
தடைமீறிக் கட்டறுத்துப் புயலாய் மாறச்
சமயம் பார்த்திருக்கு(ம்) நெடுங் குதிரை…ஊரைச்
சாய்க்க அஞ்சா பெரு முரட்டுக் குதிரை…இந்தச்
சமூகமெனும் குதிரையினை அடக்கி ஆள,
சரியான வழி ஓட்ட, பயனைக் கொள்ள, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பசுங் கொற்றக் குடைகள்!

வெண்மையைப் பசுமை கருமையாய்
மாற்றுகிற
விந்தை அறிவீரா?
வேறொன்றும் இல்லையப்பா…
வெள்ளொளியை உறுஞ்சும் பசும் இலைகள்
நிழலென்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எது வழி சொல்

உனது நிழல் மட்டும் எனது இடர்த்தீயை
உருவி அணைத்தோட்டுமாம் -திசை
உலவும் திருப்பாதம், அபய கரம், நேத்ரம்,
உதவி அருள் ஊட்டுமாம்.
நனவில் அலைத்தாலும் கனவில் வழிசொல்லி
நலிவுகளைப் போக்குமாம் -அற Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிழற்கவி யார்?

பாதாதி கேசமும் கேசாதி பாதமும்
பாடிடப் புலவருண்டு.
பாலான வேகமும் பருவத்தின் தாகமும்
பாவாக்க கவிஞர் உண்டு.
போதையை போத்தலை புணர்வினைப் பாடவும்
‘புதுக் கவிராயர்’ உண்டு. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வாழ் நாள்.

ஆயிரம் வருடங்கள் யாருமே வாழ்ந்ததில்லை!
வாழும் சிலநாளில்
மனிதமோங்க வாழ்வதில்லை!

வாழ்வு மிகச்சிறிது.
மணித்துளியிற் கணக்கிட்டால்
இவ்வளவா வாழ்வு ? என எழும்பும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

‘கலைத் தூதர்’

திருமறைக் கலா மன்றம் எனும் பெரும்
தேவ கலையகம் தன்னின் ‘பிதாமகர்’.
ஒரு அரை நூற்றாண்டாய்க் கலைப்பணி
உலகம் முற்றும் புரிந்த அருளாளர்.
அரங்கக் கலை, கூத்து, நாடகம் என்பதன்
அன்பர்; கலைஞர், ஆழ்ந்த இரசிகர்,ஆம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வழி மொழிகிறேன்

சீதளக் காற்று செந்தமிழ் பாட
தேனிசை வார்த்திடும் குழலும்,
சிந்ததன் சந்தம் சிந்திடும் தவிலும்,
செவியூடு உயிரினைக் கழுவும்!
நாதமும் இலயமும் நம்முடல் தழுவும்
நரம்பிலே அமுதமே பரவும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றிடங்கள்

வெற்றிடங்கள் ஏதும் வியனுலகில்,
இயற்கையதில்,
சற்றும் வராதென்று
சாற்றும் ‘நரன் விஞ்ஞானம்’.
வெற்றிடம்…வளி,நீரில்
விறுக்கென்று ஏற்பட்டால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இரைச்சல் விழுங்கிய இசை

ஆயிரம் ஆயிரம் வண்டி இரைச்சல்கள்,
அலறும் ‘ஹோண்கள்’ அதிர் ‘ஒலி பெருக்கிகள்’,
கூவும் சந்தைக் கூச்சல் குழப்பங்கள்,
கோஷம் பிளிறும் ஊர்வலக் கூட்டங்கள்,
ஆலை இயந்திர இடிகள் முழக்கங்கள்,
அடக்கி விழுங்குது…குயில்களின் கூவலை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மாறாதது

மாற்றமென்ற ஒன்றுமட்டும் மாறிடாது பூமியில்
மாறிக்கொண் டிருத்தல்தானே கூர்ப்பின் வேர் இயற்கையில்
தோற்றம் மாறும் சொல் செயல் தொடர்ந்து மாறும் வேளையில்
தொன்மையும் தனித்துவமும் சிதையுமே எம் சூழலில்.

பழமையும் கழிந்து சென்று புதுமை பூத்து வந்திடும்.
பருவம் மாற புதிய புதிய பதில்கள் தேடும் கேள்வியும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இப்படியே நீழுமா இரவு?

காரிருள் சூழ்ந்து கறுத்துக் கிடக்கிரவு!
ஆழ்ந்த அமைதியுள்ளும்
அசைந்தூரும் அச்சம் ஐயம்.
வீசுகிற காற்றினிலும் விளக்க ஏலா ஓர்பதற்றம்.
காரிருளுள் வேட்டையாட,
சாமத்தில் இரைகளினைத் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment